ADDED : ஜூலை 23, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை பணியாளர்களுக்கு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்யப்பட்டதை வாபஸ் செய்யக் கோரி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயசீலன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், துணை தலைவர் லியாகத் அலி சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் ஹபிபப்துல்லா சேபினர். மாவட்ட பொருளாளர் சுப்புராஜ் நன்றிக்கூறினார்.