ADDED : அக் 25, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி செண்பக விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி நடந்தது.
பள்ளி முதல்வர் சூர்யா துவக்கி வைத்தார். வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 36 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
14, 17, 19 வயது பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படும்.
ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர் முனீஸ்வரன் செய்தார்.

