நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சியில் சவுடாம்பிகா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
மாணவர்களுக்கு இனிப்பு, கார வகைகள் செய்வதற்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. சுமார் 250 கிலோ லட்டு, மைசூர்பாகு, ஜாங்கிரி உள்ளிட்ட இனிப்புகள் தயாரிக்கப்பட்டது. பயிற்சியை கல்லூரி நிர்வாக குழு தலைவர் முருகேசன், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
கல்விக் குழுமத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் பெறப்பட்டு சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதல்வர் சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.