ADDED : பிப் 18, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பென்னிங்டன் நுாலக 150வது ஆண்டை முன்னிட்டு ரசிகமணி டி.கே.சிதம்பரநாதன் படத்திறப்பு ,இலக்கிய சொற்பொழிவு கூட்டம் நடந்தது.
பென்னிங்டன் கமிட்டி தலைவர் முத்துப்பட்டர் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமாரன் முன்னிலை வகித்தார் .பொருளாளர் சிவக்குமார் வரவேற்sறார். டி.கே.சி.யின் எள்ளுபேத்தி தங்கம்மா இறைவணக்கம் பாடினார்.
டி.கே. சிதம்பரநாதன் படத்தை சிவக்கொழுந்து திறந்து வைத்தார். ராஜபாளையம் தமிழ் சங்க தலைவர் நரேந்திர குமார், தென்காசி திருவள்ளுவர் கழக செயலாளர் தீத்தாரப்பன், ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜாராம் பேசினர். செயலாளர் ராதா சங்கர் நன்றி கூறினார்.