/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மன்னர் ஆட்சி போல் நடந்து கொள்ளும் தி.மு.க.,
/
மன்னர் ஆட்சி போல் நடந்து கொள்ளும் தி.மு.க.,
ADDED : அக் 19, 2024 04:39 AM
சிவகாசி : தி.மு.க., மன்னராட்சி போல் நடந்து கொள்கிறது என முன்னாள் அமைச்சர்ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் அ.தி.மு.க., 53 ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: அ.தி.மு.க.,வில் அடித்தட்டு தொண்டன் கூட தலைவனாக வர முடியும் தி.மு.க., மன்னராட்சி போல் உள்ளது. சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்த பட்டாசுகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை என அதிகாரிகள் நெருக்கடி ஏற்படுத்துகின்றனர்.இத்தொழிலை பாதுகாக்க தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் உச்ச நீதிமன்றம் உத்தரவு இருந்த போதும் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி ஏற்படுத்தவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கனமழை காலத்தில் அமைச்சர்கள் களத்தில் இறங்கி பணி செய்ததால் வெள்ளத்தால் பாதிப்பு இல்லை. ஆனால் இப்போது மக்கள் பிரதிநிதிகள் பாதுகாப்பாக மாடி வீட்டில் உள்ளனர்.
இந்த ஆட்சியில் சொத்து வரி எத்தனையோ மடங்கு உயர்ந்து விட்டது.விலைவாசியும் அதிகரித்து விட்டது. எனவே தமிழகத்தை காப்பாற்ற அ.தி.மு.க.,விற்கு ஓட்டளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

