/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்
/
தி.மு.க., அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்
தி.மு.க., அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்
தி.மு.க., அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்
ADDED : ஜன 18, 2025 05:43 AM
சிவகாசி : தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளே அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றது, என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முறை தேர்தல் நேர்மையாக நடைபெறாது, அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவர் என்பதால் அ.தி.மு.க., இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
தி.மு.க., ஆட்சியின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் மற்ற கட்சி களும் தேர்தலை புறக்கணித்துள்ளன.
அ.தி.மு.க., ஆட்சி அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி, தி.மு.க., ஆட்சி அவர்களின் குடும்பத்திற்கான ஆட்சி.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறுவது ஏமாற்று வேலை.
தி.மு.க., கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளே அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றது.
தி.மு.க.,வின் அடக்குமுறை மற்றும் ஆணவ அரசியலை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார். விஜய் உள்ளிட்டோரும் தி.மு.க.,வை விமர்சிப்பது அ.தி.மு.க.,வுக்கு பலம் தான்.
2010ல் நடந்த பொன்னகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க., 2011ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
அப்போதும் எதிர்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன என்ற கருத்து நிலவியது. 2011ல் நடந்த வரலாறு 2026ல் திரும்பும்,
இவ்வாறு அவர் கூறினார்.