ADDED : நவ 07, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: விருதுநகருக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி சிவகாசி அருகே திருத்தங்கலில் மாநகர தி.மு.க., சார்பில் செயற்குழு மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாநகரச் செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் செண்பக விநாயகம் பங்கேற்று பேசினார்.
மாநில வர்த்தக அணி வனராஜா, பகுதி செயலாளர்கள், காளிராஜன் ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் நகர் துணை தலைவர் பொன் சக்திவேல், கவுன்சிலர் செல்வம், விளையாட்டு அணி சரவணகுமார் வெயில்ராஜ், வர்த்தக அணி சேவுகன், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.