/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பஸ் மோதி தி.மு.க., கவுன்சிலர் மகன் பலி
/
அரசு பஸ் மோதி தி.மு.க., கவுன்சிலர் மகன் பலி
ADDED : ஜன 22, 2024 04:37 AM
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு அருகே அரசு பஸ் மோதியதில், டூவீலரில் வந்த சுந்தரபாண்டியம் பேரூராட்சி திமுக கவுன்சிலர் தன்னாசியின் மகன் வெயில்வேந்தன், 20 பலியானார். மோதிய பஸ்சை மக்கள் பிடித்து வைத்து மறியலில் ஈடுபட்டதை கிருஷ்ணன்கோவில் போலீசார் சரி செய்தனர்.
வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் பேரூராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலர் தன்னாசி 45, இவரது மகன் வெயில்வேந்தன் 21, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, வயற்காட்டில் இருந்த தந்தை தன்னாசிக்கு இரவு சாப்பாடு கொடுத்து விட்டு டூவீலரில், காட்டுப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டிற்கு ஏறும் போது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்பு சென்ற அரசு பஸ் மோதியதில் வெயில்வேந்தன் பலத்த காயமடைந்தார்.
ஆட்டோ மூலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டாக்டர் பரிசோதனையின் போது உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பவ பகுதி மக்கள் பஸ்ஸை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணன்கோவில் போலீசார் சமாதானப்படுத்தினர். அரசு பஸ் டிரைவர் சின்னப்பா மீது கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.