/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., அரசே தொடர்ந்து பட்ஜெட் போடும் சொல்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

ADDED : ஜன 26, 2025 05:24 AM

விருதுநகர்: தி.மு.க., அரசே வரும் காலங்களிலும் பட்ஜெட் போடும் என விருதுநகரில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஒவ்வொரு மாதமும் 4வது சனிக்கிழமை நீர்நிலைகள், நகர், கிராமங்களில் பிளாஸ்டிக் அகற்றுவதற்கான இயக்கத்தை துவக்கி வைத்து அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக துவங்கிய மீண்டும் மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.
உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்தாண்டும் மட்டுமில்லாமல் வரும் காலங்களிலும் தி.மு.க., அரசே பட்ஜெட் போடும். ஒரு காலத்தில் வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகள் வசம் இருந்தது. ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்த பின் வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசு எடுத்துக்கொண்டது, என்றார்.
கலெக்டர் ஜெயசீலன், மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் ேஹமந்த் ஜோஷன், எம்.எல்.ஏ. சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.