ADDED : நவ 07, 2026 04:27 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் 38.
தி.மு.க., மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியில் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று (நவ.,6) விருதுநகரில் இருந்து கல்குறிச்சிக்கு டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) அப்போது வரலொட்டி அருகே வந்தபோது ரோட்டின் குறுக்கே இருந்த பேரிகார்ட் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் இன்று (நவ.,7) இறந்தார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
