ADDED : நவ 07, 2026 04:27 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று (நவ.,6) இரவு 7:00 மணிக்கும், இன்று (நவ.,7) மதியம் 3:30 மணிக்கு மேல் மழை பெய்தது.
இதனால் தீபாவளியை முன்னிட்டு பஸ் ஸ்டாண்ட், நேதாஜி ரோடு, பெரிய கடை பஜார், ஆண்டாள் கோயில் வரை சாலையோரம் கடை அமைத்திருந்த வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.
இன்று காலை நிலவரப்படி பிளவக்கல் பெரியாறு அணையில் 19.2 மில்லி மீட்டர், கோவிலாறு அணையில் 23.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆனாலும் இரு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.
