/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., ஆட்சியில் வேதனை மேல் வேதனை --ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
/
தி.மு.க., ஆட்சியில் வேதனை மேல் வேதனை --ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
தி.மு.க., ஆட்சியில் வேதனை மேல் வேதனை --ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
தி.மு.க., ஆட்சியில் வேதனை மேல் வேதனை --ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
ADDED : செப் 23, 2024 05:24 AM
சேத்துார் : தி.மு.க., ஆட்சியில் வேதனை மேல் வேதனை ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சொக்கநாதன் புத்துாரில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நவரத்தினம் தலைமை வகித்தார். ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், உதயநிதி துணை முதல்வர் பொறுப்பேற்பதால் தமிழகத்திற்கு என்ன லாபம். கடந்த மூன்று வருடங்களில் ஒரு நல்ல திட்டமும் நிறைவேறவில்லை.
மின்சாரம், பால், சொத்துவரி என அனைத்தும் உயர்த்தப்பட்டு விலைவாசி உயர்ந்துவிட்டது. ரேஷன் கடை அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. மண்ணெண்ணெய் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ஆயிரம் எனக் கூறிய ஸ்டாலின் தகுதி பார்த்து வழங்கியுள்ளார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ரூ. 2500 வழங்கப்படும். தி.மு.க., ஆட்சியில் வேதனை மேல் வேதனை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. ஆவின் பால் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்தது காரணம் என தமிழக அமைச்சர் கூறுகிறார். பாலுக்கு வரி கிடையாது என்பது அவருக்கு தெரியவில்லை, என்றார்.