/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொலைதுார பகுதிக்கு டாக்டர்கள், நர்ஸ்கள்
/
தொலைதுார பகுதிக்கு டாக்டர்கள், நர்ஸ்கள்
ADDED : செப் 26, 2024 04:30 AM
விருதுநகர்: விருதுநகரில் மாலை நேர மருத்துவ சேவைகள்வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தொலைதுார பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் தொலைதுார பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் (மாதத்திற்கு 12 நாட்கள்) மாலை 6:00 முதல் 8:00 மணி வரை மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, அவசர சிகிச்சைகளை வழங்குவர்.
இதில் மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சையை தொடர, சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளை நடத்திட இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் ஆதரவாக இருப்பர்.இச்சேவைகள் நரிக்குடி தட்சனேந்தல், ஆனைக்குளம், இருவர்குளம், திருச்சுழி காரேந்தல், கீழக்குடி, பி.தொட்டியங்குளம், வெம்பக்கோட்டை மம்சாபுரம், பனையடிபட்டி, வலையகுளம் என 9 துணை சுகாதார நிலையங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இச்சேவைகளை வழங்கும் வகையில் 9 மருத்துவர்கள் மற்றும் 9 இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

