/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் நாய்கள் கருத்தடை மையம் ஜூன் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும்
/
சிவகாசியில் நாய்கள் கருத்தடை மையம் ஜூன் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும்
சிவகாசியில் நாய்கள் கருத்தடை மையம் ஜூன் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும்
சிவகாசியில் நாய்கள் கருத்தடை மையம் ஜூன் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும்
ADDED : மே 20, 2025 12:31 AM
சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசியில் நாய்கள் கருத்தடை மையத்தை ஆய்வு செய்த மேயர் சங்கீதா, கமிஷனர் சரவணன் ஜூன் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தனர்.
சிவகாசி என்.ஆர்.கே.ஆர்., ரோடு பஜார் பகுதியில் அதிகமான கடைகள் இருப்பதால் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். டூவீலர் கார்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்நிலையில் என்.ஆர்.கே.ஆர்., ரோடு பஜார் பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் ரோட்டில் நடந்து, சைக்கிள், டூ வீலரில் செல்பவர்களை விரட்டிக் கடிக்கின்றது. தவிர டூவீலரில் செல்பவர்களை விரட்டுகையில் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதேபோல் சிவகாசி ரத வீதிகள், பழைய விருதுநகர் ரோடு, பி.எஸ்.ஆர்., ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன.
சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் செயல்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அடையாளம் காணப்பட்டு தனியார் அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நிதி ஒதுக்கப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது இதனால் ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மேயர் சங்கீதா கமிஷனர் சரவணன் அலுவலர்கள் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள தெருநாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தனர். இங்கு உடனடியாக பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மேயர் சங்கீதா தெரிவித்தார்.