UPDATED : அக் 15, 2026 07:51 PM
ADDED : அக் 15, 2026 07:48 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று காலை கோயில் வளாகத்தில் உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன் தலைமையில், செயல் அலுவலர் சக்கரையம்மாள் முன்னிலையில் நடந்தது.
கோயில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் குழுவினர் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ. 25 லட்சத்து 62 ஆயிரத்து 106 பணமும், 59 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி காணிக்கையாக வரப்பட்டிருந்தது.
