/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வடிகால் சிலாப் சேதம்: மக்கள் பாதிப்பு
/
வடிகால் சிலாப் சேதம்: மக்கள் பாதிப்பு
ADDED : நவ 20, 2024 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் லெட்சுமி நகர் பஸ் நிறுத்தத்தில் வடிகால் சிலாப் சேதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு நிற்கும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
விருதுநகர் லெட்சுமி நகர் பஸ் நிறுத்தத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் இந்த பஸ் நிறுத்தத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
இதில் உள்ள ஒரு வடிகால் சிலாப் ஒரு வாரம் முன்பு பயணி ஒருவர் நிற்கும் போது உடைந்து விழுந்தது. அதை அகற்றிவிட்ட நிலையில் தற்போது சிலாப் இல்லாமல் உள்ளது. இது விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதை சரி செய்ய வேண்டும்.