/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அமைச்சர் தொகுதியில் 4 ஆண்டுகள் ஆகியும் முடியாத வாறுகால் பணி
/
அமைச்சர் தொகுதியில் 4 ஆண்டுகள் ஆகியும் முடியாத வாறுகால் பணி
அமைச்சர் தொகுதியில் 4 ஆண்டுகள் ஆகியும் முடியாத வாறுகால் பணி
அமைச்சர் தொகுதியில் 4 ஆண்டுகள் ஆகியும் முடியாத வாறுகால் பணி
ADDED : ஆக 15, 2025 02:21 AM

திருச்சுழி: அமைச்சர் தங்கம் தென்னரசு தொகுதியான திருச்சுழி மெயின் பஜாரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட வாறுகால் பணி முடியாமல் அரைகுறையாக விட்டுள்ளதை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் மக்கள் தினசரி அவதியடைந்து வருகின்றனர்.
திருச்சுழி பஜார் பகுதியில் பழைய ஸ்டேட் பேங்க் எதிர்ப்புறத்தில் ரோடு ஓரத்தில் வாறுகால் அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. வாறுகால் இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டி மேலே ஸ்லாப் போட்டு மூடி வந்த நிலையில், நரிக்குடி ரோடு அருகே உள்ள பகுதியில் மட்டும் வாறுகால் அமைக்காமல் பணியை அரைகுறையாக நிறுத்தி வைத்துள்ளனர். ஸ்லாப் கல்லும் போடவில்லை. வாறுகால் பணி முழுமையாக முடிவடையாததால் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. வாறு காலுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு மக்கள் வந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து கடைக்காரர்களும் மக்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் மக்கள் சிரமப்படுவது உடன் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. திருச்சுழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மீதமுள்ள வாறுகால் பணியை முடிக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.