/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் பதிக்காமல் வீணாகும் குடிநீர் குழாய்கள்
/
சாத்துாரில் பதிக்காமல் வீணாகும் குடிநீர் குழாய்கள்
சாத்துாரில் பதிக்காமல் வீணாகும் குடிநீர் குழாய்கள்
சாத்துாரில் பதிக்காமல் வீணாகும் குடிநீர் குழாய்கள்
ADDED : ஜூலை 26, 2025 11:21 PM

சாத்துார்: சாத்துாரில் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக கொண்டுவரப்பட்ட குடிநீர் குழாய்கள் பதிக்கப்படாமல் பல மாதங்களாக உள்ளதால் அரசு நிதி வீணாகும் அபாயம் உள்ளது.
விருதுநகர், அருப்புக் கோட்டை, சாத்துார் நகராட்சிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் புதியதாக குடிநீர் கொண்டு வருவதற்காக மத்திய அரசு ரூ 446 கோடி நிதி ஒதுக்கியது.
இந்த திட்டத்தின் கீழ் சாத்துார் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் புதியதாக குடிநீர் இணைப்பு குழாய் பதிக்கப்பட்டது. மேலும் புதிய குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் குடிநீரை மேல்நிலைத் தொட்டியில் நிரப்பி வினியோகம் செய்வதற்காக பைபாஸ் ரோடு, சொக்கலிங்கம் பூங்கா மெயின் ரோடு, நீரேற்று நிலையம் சாமியார் காலனி, வாழ வந்தாள் புரம் பகுதியில் நான்கு புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கப்படாத நிலையில் இந்த மேல்நிலைத் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் பழைய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமே நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் பகிர்மான குழாய்களும் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. சாத்துார் வைப்பாற்றில் புதிய குடிநீர் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட குடிநீர் பகிர்மானக் குழாய்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பறிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் சுகபுத்ரா நேரில் பார்வையிட்டு குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணியை விரைவு படுத்த கூறியும் இன்று வரை பணி ஆரம்பிக்கப்படவில்லை. வீண் கால தாமதம் ஆவதால் அரசின் நோக்கமும் திட்டமும் நிறைவேறாமல் போவதோடு நிதியும் வீணாகும் அபாயம் உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாது குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.