ADDED : அக் 30, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப், : வத்திராயிருப்பில் 89 வயது மூதாட்டி லட்சுமி உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மலைக்கனியை, கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பை சேர்ந்தவர் மாரியம்மாள் 48, கணவரைப் பிரிந்து தனது தாய் லட்சுமியுடன் வாழ்ந்த மாரியம்மாள் கோபாலபுரத்தை சேர்ந்த டிரைவர் மலைக்கனி,48, என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனை தாய் லட்சுமி கண்டித்துள்ளார்.
அக். 27 ல் தனது வீட்டில் லட்சுமி உடலில் காயத்துடன் விழுந்து கிடந்து உள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் மலைக்கனியிடம் விசாரணை நடத்தினர். இதில் குடிபோதையில் லட்சுமியை தள்ளிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து கொலை வழக்கின் கீழ் மலைக்கனியை போலீசார் கைது செய்தனர்.

