UPDATED : செப் 12, 2026 10:35 PM
ADDED : செப் 12, 2026 10:32 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்:ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் ராணி 59. கணவர் இறந்துவிட்டார். மகன் வெளிநாட்டில் வசிக்கிறார். இவர்களுக்கு சொந்தமான தோப்பு வத்திராயிருப்பு அருகில் உள்ளது. தோப்பிற்கு ராணி காரில் சென்று பார்த்து வருவது வழக்கம். கார் டிரைவாக ராஜசேகர் சென்று வருவார்.
இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பிரேஸ்லெட், தங்கச் செயின், மோதிரங்கள் என 15 பவுன் நகை திருடு போயிருந்தது. தெரிந்த நபர் யாரோ வீட்டின் சாவியை திறந்து நகை திருடி உள்ளதாக வடக்கு போலீசில் ராணி புகார் செய்தார். விசாரணையில் கார் டிரைவர் ராஜசேகர் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
