ADDED : செப் 12, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், செப். 13 –
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சைத்துறை சார்பில் குடல் இணைப்புக் கருவி பயன்பாடு என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது.
இதில் துறை தலைவர் லட்சுமி நாராயணன், பேராசிரியர் மல்லிகா, டாக்டர் அசோக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் ரமணி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி உள்பட பலர் பங்கேற்றனர்.
