ADDED : செப் 07, 2025 02:50 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் சக ஆட்டோ டிரைவர் செந்தில் குமார் 42, என்பவர் மீது ஆட்டோவை மோதி கொலை செய்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பொன்ராஜ் 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரை குளம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். இருவரும் ஆட்டோ டிரைவர்கள். ஒரே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இதில் இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மதியம் 01:50 மணிக்கு சக்கரை குளம் தெருவில் பொன்ராஜ் ஆட்டோவில் வேகமாக வந்து மோதியதில் அங்கு நின்றிருந்த செந்தில்குமார் பலத்த காயமடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதனையில் அவர் உயிர் இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் பொன்ராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.