/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி போராடிய டிரைவர்
/
வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி போராடிய டிரைவர்
ADDED : ஜன 06, 2026 05:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆராய்ச்சி பட்டி தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரன் 32, டிராக்டர் டிரைவர். இவரது மனைவி பிரியதர்ஷினி. 2 குழந்தைகள் உள்ளது.
மாரீஸ்வரன் மது அருந்தி தகராறு செய்து வந்ததால் மனைவி அவரை விட்டு பிரிந்தார். நேற்று காலை 11:45 டவுண் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மாரீஸ்வரன், பின்புறத்தில் இருந்த செயல்படாத வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி, மனைவியை சேர்த்து வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார், தீயணைப்பு துறையினர் அவருக்கு அறிவுரை கூறி,கீழே அழைத்து வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் முன்பு, தனக்கு பழக்கமான ஒரு பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். அவரது புகாரில் மாரீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

