/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : செப் 20, 2024 02:24 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர்மாவட்டம் ராஜபாளையம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் ஜெயசீலனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் 27; டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சாத்துார் மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ஜெயசீலனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.