/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளிச்சம் தராத ஒளிரும் விளக்குகள் இரவில் தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
வெளிச்சம் தராத ஒளிரும் விளக்குகள் இரவில் தடுமாறும் வாகன ஓட்டிகள்
வெளிச்சம் தராத ஒளிரும் விளக்குகள் இரவில் தடுமாறும் வாகன ஓட்டிகள்
வெளிச்சம் தராத ஒளிரும் விளக்குகள் இரவில் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 27, 2025 11:15 PM
விருதுநகர்: விருதுநகரில் இருந்து சிவகாசி, அருப்புக்கோட்டை செல்லும் ரோடுகள், சாத்துாரில் இருந்து சிவகாசி, வெம்பக்கோட்டைக்கு செல்லும் ரோடுகளில் ஒளிரும் விளக்குகள் போதிய வெளிச்சம் தராததால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் தவிக்கின்றனர்.
மாவட்டம் தொழில்களை சார்ந்து செயல்படுவதால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நான்கு வழிச்சாலையை போலவே மாநில நெடுஞ்சாலைத்துறையின் ரோடுகளும் இரவு முழுவதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் இதில் பல ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்குகள் இரவில் பெரிய அளவில் வெளிச்சம் தருவதில்லை. இதனால் வளைவு தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுவது அதிகரித்துள்ளது. அதே போல் பாலங்களின் முன்புறம் வைக்க வேண்டிய எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாமல் உள்ளன.
விருதுநகர் - சிவகாசி ரோடு வணிக போக்குவரத்துக்கு மிக முக்கியமான ரோடு. இந்த ரோட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஒளிரும் விளக்குகள் பிரகாசமாக உள்ளது.
பெரும்பாலான இடங்களில் அவற்றின் வெளிச்சம் போதவில்லை. இதனால் இரவில் வாகனங்களை ஓட்டி வருவோர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். டூவீலர்களில் வருவோர் எதிர்புறத்தில் வரும் வாகன ஓட்டிகளின் ஹைபீம் ஒளியால் ரோட்டின் ஓரம் தெரியாமல் தவறி விளைநிலங்களில் கவிழ்ந்து விழும் நிலை உள்ளது. இதே நிலை தான் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் வரும் ரோட்டுக்கும். பல இடங்களில் ஒளிரும் விளக்குகளை மறைத்து விடும் அளவுக்கு களை செடிகள் அதிகரித்து காணப்படுகின்றன.
சாத்துார் - சிவகாசி ரோடும் முக்கிய வழித்தடம். இவ்வழியாக அதிகப்படியான கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றி செல்கின்றன. இங்கும் பெரிய அளவில் ஒளிரும் விளக்குகள் வெளிச்சம் தரவில்லை. இதனால் பலரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.