UPDATED : நவ 28, 2026 12:06 AM
ADDED : நவ 28, 2026 12:06 AM
காரியாபட்டி: காரியாபட்டி அழகியநல்லூரில் வேளாண் துறை அட்மா திட்டத்தின் கீழ், பருத்தியில் மானிய விலையில் ட்ரோன் மூலம் நீரில் கரையும் மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிர் உரம் தெளிக்கும் செயல்விளக்கம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன் முன்னிலையில் நடந்தது.
மாவட்ட வேளாண் துணை இயக்குநர் லதா, ட்ரோன் மூலம் உரம் தெளிப்பதன் மூலம் சீரான முறையில் கரைசலைத் தெளிக்க, மனித உழைப்பு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதே அரசின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
காரியாபட்டி வேளாண் உதவி இயக்குநர் கீதா, துணை வேளாண் அலுவலர் ராமசந்திரன், உதவி வேளாண் அலுவலர் பார்வதி பேசினர். ஏற்பாடுகளை அட்மா அலுவலர்கள், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் காயத்திரிவிஷாலி உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் கணேஷ்பிரபு, அருண்குமார் செய்திருந்தனர்.
