/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதிகரித்து வரும் கொலைகளுக்கு போதைப் பழக்கமே மூலகாரணம்
/
அதிகரித்து வரும் கொலைகளுக்கு போதைப் பழக்கமே மூலகாரணம்
அதிகரித்து வரும் கொலைகளுக்கு போதைப் பழக்கமே மூலகாரணம்
அதிகரித்து வரும் கொலைகளுக்கு போதைப் பழக்கமே மூலகாரணம்
ADDED : டிச 24, 2024 04:08 AM
ராஜபாளையம்: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை குற்ற சம்பவங்களுக்கு போதை பழக்கமே மூல காரணம் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர், தனியரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் நெசவாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கூறுகையில், பல ஆண்டுகளாக நெசவாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கூலி உயர்வு, 60 வயது கடந்த மூத்த நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் அரசு உடனே வழங்க வேண்டும். விவசாயத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை ஜவுளி தொழிலுக்கும் வழங்கி பஞ்சாலைகளையும், நுாற்பாலைகளையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு வருபவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொழில் வளர்ச்சியை பாதிக்கும். தென் தமிழகத்தில் கொலை,ஜாதி மத மோதல்கள் நடக்காமல் தடுக்க அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு போதைப் பொருட்கள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு பள்ளி கல்லுாரி மாணவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொலைகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு போதைப்பழக்கம் மூல காரணமாக உள்ளது. போதை வஸ்துக்களின் நடமாட்டத்தை அரசு கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.