/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் போதை ஆசாமிகள்
/
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் போதை ஆசாமிகள்
ADDED : ஜூலை 22, 2025 03:21 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் கஞ்சா போதைக்கு அடிமையான ஆசாமிகளால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. காட்சி பொருளாக உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3 கோடி 40 லட்சம் செலவில் புதுப்பித்து திறக்கப்பட்டு 54 நாள்கள் கடந்தும் கடைகள் ஏலம் விடாமல் மூடப்பட்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாததால் பயணிகள் அலை கழிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் மூடியுள்ள கடைகளின் முன்பு போதை ஆசாமிகள் விழுந்து கிடப்பதும், கஞ்சாவிற்கு அடிமையானவர்களும் முகாமிட்டுள்ளனர். இவர்களின் செயலால் பள்ளி, கல்லுாரி மாணவிகள் உள்ளிட்ட பெண் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவிக்க வழியும் இல்லை.
எனவே 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்வதுடன் பஸ் ஸ்டாண்ட் முன்பு காட்சி பொருளாக உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.