/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 30, 2025 03:52 AM
சிவகாசி : சிவகாசி ஆனைக்குட்டம் சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரியில் போதை பொருட்கள் விழிப்புணர்வு இரு நாட்கள் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சோலைராஜ் வரவேற்றார். முதல் நாளில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆர்.டி.ஓ.,பிரியா ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலம் திருத்தங்கல் பஸ் ஸ்டாண்டில் துவங்கி ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்தது. திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் பேசினார். போதைப்பொருட்கள் கேடுகள், மதுவுக்கு அடிமையாகாமல் வலியுறுத்தல், கள்ளச்சாராயத்தின் தீங்குகள், மீட்பு நடவடிக்கைகள், தலைக்கவசம் அணிதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.