/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருத்தி உற்பத்தி குறைவால் பஞ்சாலைகள் திணறல்; சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது அவசியம்
/
பருத்தி உற்பத்தி குறைவால் பஞ்சாலைகள் திணறல்; சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது அவசியம்
பருத்தி உற்பத்தி குறைவால் பஞ்சாலைகள் திணறல்; சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது அவசியம்
பருத்தி உற்பத்தி குறைவால் பஞ்சாலைகள் திணறல்; சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது அவசியம்
ADDED : அக் 12, 2025 04:28 AM
தமிழகத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டம் விளங்கியது. மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் பருத்தி சாகுபடி அதிக அளவில் விவசாயிகள் செய்து வந்தனர்.
இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகளில் ஏராளமான பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இதன் மூலம் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் பருத்தி சாகுபடி குறைய துவங்கியது. இதில் உற்பத்தி செலவு அதிகரித்து கொள்முதல் விலை குறைவாக இருந்ததால் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியை குறைக்க துவங்கினர். தற்போது கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி மாவட்டத்தில் பெரும் அளவில் குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை போன நிலையில் தற்போது ரூ. 6 ஆயிரத்திற்கு மட்டுமே விலை போவதால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் போதிய பருத்தி கிடைக்காமல் பஞ்சாலைகள் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் பஞ்சு கொள்முதல் விலை அதிகமாகவும், நூல் விலை குறைவாகவும் இருந்ததால் பெரும்பாலான ஆலைகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர்.
இதனால் பஞ்சாலைகள் தொடர்ந்து வேலை வழங்க முடியாமல் மாதத்தில் பாதி நாட்கள் மட்டுமே வேலை வழங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வருவாய் இழப்பிற்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டது.
தொடர்ந்து மிகுந்த பொருளாதார நெருக்கடியை சந்தித்ததால் பல பஞ்சாலைகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகிறது. இதனால் தற்போது இயங்கும் குறைவான ஆலைகளும் தொடர்ந்து இயங்க மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை அதிகரிக்க வேண்டும். இதற்கு அரசின் சார்பில்
பொருளாதாரம் உதவி, நவீன தொழில்நுட்ப பயிற்சி, மானிய விலையில் உரங்கள் வழங்குதல், பருத்தியை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்களை குறைத்தல் உட்பட அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தந்தால் மட்டுமே எதிர்காலத்தில் பஞ்சாலைகள் தொடர்ந்து இயங்க முடியும். தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுப்பது உடனடி அவசியம்.