/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
ADDED : அக் 21, 2024 11:08 PM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள் வட்ட சில்லு உள்ளிட்ட 2300 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் சுடுமண்ணால் ஆன மணி, காதணி, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், இங்கு முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது. அதன்படி சங்கு வளையல் வியாபாரமும் நடந்துள்ளது.
மேலும் அலங்கார பொருட்களிலும் முன்னோர்கள் ஆர்வம் இருந்ததற்கு சான்றாக சுடுமண் மணி, அலங்கரிக்கப்பட்ட காதணி கிடைத்துள்ளது, என்றார்.