தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்டத்தில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம்

மாவட்டத்தில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம்

மாவட்டத்தில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம்


ADDED : ஏப் 21, 2025 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 05:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் கத்தோலிக்க சர்ச்சுகளில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம், நள்ளிரவு திருப்பலிகள் நடைபெற்றன. கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

ஈஸ்டர் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு, திருஒளி, இறைவார்த்தை, ஞானஸ்நானம் ஆகிய வழிபாடுகள், ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு கூட்டுத் திருப்பலி, மறையுரை நடைபெற்றன.

இயேசு 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் நள்ளிரவு 12.00 மணிக்கு திருப்பலி பீடம் அருகில் இயேசு கொல்கதா மலையில் உயிர்த்தெழுந்து காட்சி கொடுப்பதை போல தத்ரூபமாக செயல் முறையில் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

அப்போது இசைக்கருவிகள் முழங்க உயிர்த்த ஆண்டவரை மெழுகுவர்த்தி ஏற்றி உற்சாகமாக வரவேற்றனர்.

விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில், பாதிரியார் அருள்ராயன், உதவி பாதிரியார் தேவராஜ் தலைமையில், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம் ஆகியோர் தலைமையில், நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிசாமி, ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் சாமிநாதன், சாத்துார் இயேசுவின் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் பாதிரியார் காந்தி, ஒத்தையால் அற்புதக் குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் ஜான் மில்டன், காரியாபட்டி அமல அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜோசப் அமலன், அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் அந்தோணி பாக்கியம், சிவகாசி லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான் மார்ட்டின், திருத்தங்கல் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், தும்முசின்னம்பட்டி வியாகுல அன்னை சர்ச், அதன் கிளை பங்கு சர்ச்சுகளில் பாதிரியார் மரிய துரை, மீனம்பட்டி அன்னை தெரேசா சர்ச்சில் பாதிரியார் பால்ராஜ், வடபட்டி அருளானந்தர் சர்ச்சில் பாதிரியார் சந்திரநேவிஸ், சிவகாசி சாட்சியாபுரம் புனித வேளாங்கண்ணி சர்ச்சில் அற்புத சாமி ஆகியோர் தலைமையில் பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்பு விழா திருப்பலி, மறையுரை நடைபெற்றன.

* ஸ்ரீவில்லிபுத்துார் துாய தோமா சர்ச்சில் சபை குரு பால் தினகரன் தலைமையில் சிறப்பு ஆராதனை, தேவ செய்தி அளித்தல் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us