/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் மழை எதிரொலி: அணைகளின் நீர்மட்டம் உயர்வு ஆனைக்குட்டத்தில் 7.22 அடி நீர்
/
தொடர் மழை எதிரொலி: அணைகளின் நீர்மட்டம் உயர்வு ஆனைக்குட்டத்தில் 7.22 அடி நீர்
தொடர் மழை எதிரொலி: அணைகளின் நீர்மட்டம் உயர்வு ஆனைக்குட்டத்தில் 7.22 அடி நீர்
தொடர் மழை எதிரொலி: அணைகளின் நீர்மட்டம் உயர்வு ஆனைக்குட்டத்தில் 7.22 அடி நீர்
ADDED : அக் 24, 2025 02:25 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள சூழ்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்கிறது. நேற்றும், நேற்று முன்தினம் மட்டுமே வெயில் அடித்தது. இந்நிலையில் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அக். 17 முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள சூழலில், இந்தாண்டு இயல்பை விட கூடுதல் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.
குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததோடு, வீதிகளிலும் தேங்கி பாடாய்படுத்தியது. நேற்றும், நேற்று முன்தினமும் பெரிய அளவில் மழை இல்லை. பிளவக்கல்லில் 8 மி.மீ., ராஜபாளையம் 1மி.மீ., வத்திராயிருப்பு 2 மி.மீ., மழையளவு மட்டுமே பதிவானது.
அணைகளின் நீர்மட்டம் பிளவக்கல் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 47.56 அடிக்கு தற்போது 41 அடி நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளது. கோவிலாறு 42.65 அடிக்கு 20.67 அடி உள்ளது. சாஸ்தாகோவில் நீர்தேக்கத்தில் 32.81 அடிக்கு 32.81 அடி நிரம்பி வழிகிறது. கோல்வார்பட்டி அணையில் 18.04 அடிக்கு 8.37 அடியும், ஆனைக்குட்டம் அணையில் 24.60 அடிக்கு 7.22 அடியும், குல்லுார்சந்தை அணையில் 19.68 அடிக்கு 15.78 அடியும், இருக்கன்குடி அணையில் 22.30 அடிக்கு 16.24 அடியும், வெம்பக்கோட்டை 22.95 அடிக்கு 20.97 அடியும் நீர்மட்டம் உள்ளது.

