/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலத்திற்காக பணம் பறிகொடுத்தவர்கள் புகார் செய்ய வாய்ப்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

ADDED : பிப் 18, 2024 12:45 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினால் நிலம் பத்திரப்பதிவு செய்து தரப்படும் என்ற மோசடியில் பணத்தை பறிகொடுத்து நிலத்தை பெறாதவர்கள் திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என இன்ஸ்பெக்டர் தேவி தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஜெயபாஸ்கர், கீதா, வேணுகோபால், உமாராணி, ஜேக்கப் சுப்புராம், ஜெயசீலன் உள்பட சிலர் சேர்ந்து திருநெல்வேலி டவுண், மேல ரத வீதி, சந்திபிள்ளையார் கோயில் அருகே பிரியம் பிளாசா' என்ற நிறுவனத்தை தலைமையாக கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா ரியல் எஸ்டேட், ஸ்ரீ கிருஷ்ணா குரூப்ஸ், ஸ்ரீ ராதே கிருஷ்ணா குழுமம், ஓம் நம சிவாயா ரியல் எஸ்டேட், அகிரா லேண்ட் மார்கெட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் நடத்தி வந்தனர்.
இந்நிறுவனங்களில் தவணை முறையில் பணம் செலுத்தினால் நிலம் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி பலரை நம்ப வைத்து பணத்தை பெற்று நிலத்தை பத்திர பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இவர்கள் மீது திருநெல்வேலி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த நிறுவனங்களில் தவணை முறையில் பணத்தை முதலீடு செய்து நிலத்தை பத்திரப்பதிவு பெறாமல் ஏமாற்றப்பட்டவர்கள் நம்பர் - 3. ராஜராஜேஸ்வரி நகர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே திருநெல்வேலி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ( தொலைபேசி எண் 0462 2554300) அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.