ADDED : ஜூலை 26, 2011 10:03 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் உலக கல்வி அமைப்பு, சார்க் நாடுகள் அமைப்பு, கனடியன் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதவியுடன் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பெண் ஆசிரியர்களுக்கு கல்வி மேம்பாட்டு கருத்தரங்கு நடந்தது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வின் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில பொது செயலர் ரெங்கராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பொன்னம்பலம், முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ், மாவட்ட செயலர் ரமேஷ், மாநில துணை தலைவர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். வட்டார செயலர் கோவிந்தராஜ் வரவேற்றார். பெண் கல்வி, ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ், விழிப்புணர்வு, கல்வி மேம்படுத்துவது பற்றி விளக்கி கூறப்பட்டது. ஏற்பாடுகளை கிளை தலைவர் ராகவன் மற்றும் பொது குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். பொருளாளர் விஜயமணி நன்றி கூறினார்.