/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாழ்க்கையின் பொருளை உணர்வதற்கு கல்வி அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
/
வாழ்க்கையின் பொருளை உணர்வதற்கு கல்வி அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
வாழ்க்கையின் பொருளை உணர்வதற்கு கல்வி அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
வாழ்க்கையின் பொருளை உணர்வதற்கு கல்வி அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
ADDED : செப் 27, 2025 11:22 PM

காரியாபட்டி:''பட்டம் மாணவர்களுக்கு ஓர் அடையாளம். வாழ்க்கையின் பொருளை உணர்வதற்கு கல்வி அவசியம், அறிவு அச்சம் காக்கும் ஆயுதம்,'' என உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசினார்.
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா, நிறுவனர் முகமது ஜலீல் தலைமையில், நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலையில் நடந்தது. முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். வணிக ஆலோசனை குழு முன்னாள் தலைவர் முகமது இக்பால் ராவுத்தர், மலேசியா கேப்பிட்டல் ரெஸ்டாரன்ட் மேனேஜிங் டைரக்டர் ரைசா பேசினர். இளநிலை பொறியியல் படிப்பில் 989, முதுநிலை பொறியியல் படிப்பில் 61 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பட்டம் வழங்கி பேசியதாவது,
மொழியையும், மண்ணையும் நேசித்து, கல்வியின் அறிவையும், பெருமையையும் இந்த உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும. பட்டம் என்பது ஒரு நுழைவுச்சீட்டு. உலகில் உள்ள உண்மைகளை மாணவர்கள் சந்திக்கும் போது என்ன விதமான நிலைமையை எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வாழ்க்கை அமையும். பட்டமளிப்பு மாணவர்களுக்கான ஓர் அடையாளம். வாழ்க்கையின் பொருளை உணர்வதற்கு கல்வி அவசியம். அறிவு, அச்சம் காக்கும் ஆயுதம். கல்வி மட்டுமே வாழ்வின் எந்த நிலைக்கும் உயர்த்தும். காலம், நேரம் வாழ்வில் உன்னதமானது. கை நழுவ விட்ட வாய்ப்பு, நேரம் ஒருபோதும் திரும்ப பெற முடியாது. மாணவர்களின் வாழ்க்கையில் இன்பம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் அடுத்த 10 ஆண்டுகளுக்கான சிந்தனை, திட்டமிடல் வேண்டும். பாடத்தை படித்து மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வி அல்ல. அதைத் தாண்டி உலகம் சார்ந்த ஞானம், அறிவும் பெற வேண்டும். கல்வி என்பது புத்தகத்தில் மட்டுமல்ல. அதைத் தாண்டி நிறைய கற்றுக்கொள்ளவது தான் பலன் தரும். வாழ்க்கை கரடுமுரடானது. கடக்க பழகிக் கொண்டால், வாழ்க்கை சிறப்பானதாக அமையும், என்றார்.