/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எக்கலாதேவி அம்மன் கோயில் கொடியேற்றம்
/
எக்கலாதேவி அம்மன் கோயில் கொடியேற்றம்
ADDED : ஏப் 13, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார் : சேத்துார் எக்கலா தேவி அம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா ஏப். 20ல் நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு அம்மன் தண்டியல் சப்பரத்தில் வீதி உலா வந்து பூ வளர்ப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு பூக்குழி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை எக்கலாதேவி அம்மன் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

