தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி


ADDED : பிப் 20, 2025 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதியவர் பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் அபிமன்னன், 72, இவருடன் கேரளாவில் வேலை செய்த பெருந்துறையைச் சேர்ந்த பொன்னுச்சாமி,74, இரண்டு நாட்களுக்கு முன்பு செட்டிகுறிச்சிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு துாங்கிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியை அவரது நண்பர் எழுப்பிய போது அசைவின்றி கிடந்துள்ளார். உடன் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

விருதுநகர்: ஒண்டிப்புலிநாயக்கனுாரைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர் வீட்டின் அருகே செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகள் 100 குரோஸ், வெள்ளை திரிகள் 35 குரோஸ், சாட்டை 1/2 பெட்டி, பசை மாவு மூடை 1, சல்லடை 2, முக்காலி 2, டேப் ரோல் 10, ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி தற்கொலை

சாத்துார்: சாத்துார் சிப்பிப்பாறையை சேர்ந்தவர் மாரிமுத்து, 44.பட்டாசு ஆலை தொழிலாளி.வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us