UPDATED : அக் 20, 2026 04:47 PM
ADDED : அக் 20, 2026 04:44 PM

திருச்சுழி: திருச்சுழி அருகே ஒத்தகடையில் மின்கம்பம் சாய்ந்து ரோட்டில் விழும் அபாய நிலையில் உள்ளது.
திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் ஒத்தகடை பகுதியில் மருத்துவமனை அருகில் மின்கம்பம் உள்ளது. 4 மாதங்களாக சிறிது சிறிதாக சாய்ந்து வருகிறது. களிமண் தரையாக இருப்பதால் மின்கம்பம் விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. இதன் அருகில் சாயல்குடி - அருப்புக்கோட்டை ரோடு உள்ளது. போக்குவரத்து மிகுந்த பகுதி. இரு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மின்கம்பம் மேலும் சாய்ந்து கிடக்கிறது. முற்றிலும் சாய்ந்து ரோட்டில் செல்லும் வாகனங்கள் மீது விழும் அபாயத்தில் உள்ளது,. இனி ஒரு நாட்களில் தொடர் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மின் கம்பம் விழுவதற்குள் மின்வாரியத்தினர் சரி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
