ADDED : ஜன 12, 2026 05:34 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் மின் கம்பி அறுந்து தரையில் விழுந்ததில் செடி, கொடிகளில் தீப்பற்றி எரிந்து கருகியது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காரியாபட்டி மின்வாரியத்தில் இருந்து வக்கணாங்குண்டு, தோணுகால், பிசிண்டி, மாந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆலைகள், விவசாயம் ஆகியவற்றிற்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை பனிமூட்டம் இருந்ததுடன், லேசான மழை சாரல் விழுந்தது. இந்நிலையில் தோணுகால் குண்டாறு அருகே மின் ஒயரில் தீப் பற்றி அறுந்து தரையில் விழுந்தது. செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்து கருகியது. இப்பகுதியில் வழக்கமாக பலர் நடைபயிற்சி செய்யும் நிலையில், மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
