/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
ADDED : ஏப் 11, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 45, இவர் எலக்ட்ரீசியன்.
இவருடைய மனைவி ஜெயசித்ரா, 42, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நர்சாக உள்ளார். நேற்று முன்தினம் சீனிவாசன் பந்தல்குடி -உடையநாதபுரம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.