UPDATED : அக் 10, 2026 04:36 AM
ADDED : அக் 09, 2026 07:47 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: மின்வாரியத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேசன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் இளங்கோவன், செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர்.
ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வந்தால் மின் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்தாகும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கோஷங்கள் எழுப்பினர்.
