நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் தெற்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடந்தது.
தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ் தலைமை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற முடியனுர் அன்னை துர்கா அணி முதல் பரிசு கேடயம், 50 ஆயிரமும், இரண்டாவதாக வெற்றி பெற்ற நாச்சியாபுரம் சிவந்த கண்கள் அணிக்கும், 3 வது இடத்தை பெற்ற ஆவியூர் ஐ.கே., அணிக்கும் பரிசுகள், கேடயங்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் ,தங்கம் தென்னரசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ரகுராமன், சீனிவாசன், அசோகன், தங்கபாண்டியன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.