/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்னணு டிக்கெட் வந்தாச்சு... தினசரி பயணப் பட்டியல் எதற்கு அரசு பஸ் கண்டக்டர்கள் கேள்வி

ADDED : மார் 16, 2025 02:19 AM
விருதுநகர்:அரசு பஸ்களில் மின்னணு டிக்கெட் கொடுப்பது நடைமுறைக்கு வந்தும், தினசரி பயணப் பட்டியல் (இன்வாய்ஸ்) தயாரித்து வழங்க வேண்டியிருப்பதாக கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகத்தின் விரைவு, ஏ.சி., பைபாஸ் ரைடர், ஒன் டூ ஒன், மாநகர் பஸ்களில் எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்து மின்னணு இயந்திரங்கள் மூலம் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மிஷினுக்கும் தனி அடையாள எண் உண்டு. போக்குவரத்து மண்டல அலுவலகங்களில் மிஷினின் தனி அடையாள எண்ணை பதிவு செய்தால் டிக்கெட் விநியோகம், விற்பனை தொகை என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். கண்டக்டர்கள் பணி முடியும் போது கணக்கை சமர்பிப்பது எளிதாக மாறியது.
இருப்பினும் தினசரி பயணப் பட்டியலை நிரப்பி கொடுக்குமாறு கண்டக்டர்களை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:
பழைய டிக்கெட் நடைமுறையில் விற்பனை, இருப்பு, பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை சரிபார்க்க தினசரி பயணப்பட்டியல் (இன்வாய்ஸ்) தேவையாக இருந்தது.
தற்போது டவுன் பஸ்களில் மட்டுமே அச்சிட்ட டிக்கெட் வழங்கும் நடைமுறை உள்ளது.
வெளியூர் பஸ்களில் கையடக்க மிஷின் மூலமே டிக்கெட் தரப்படுகிறது.
இதற்கு தினசரி பயணப்பட்டியல் நிரப்ப வேண்டியது தேவையற்றது.
ஆனால் சரியான வழிகாட்டுதல்களை வழங்காததால் தினமும் பட்டியலை நிரப்பி வழங்க வேண்டியுள்ளது என்றனர்.