sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆனித் திருவிழா தேரோட்டம்

/

ஆனித் திருவிழா தேரோட்டம்

ஆனித் திருவிழா தேரோட்டம்

ஆனித் திருவிழா தேரோட்டம்


ADDED : ஜூலை 11, 2025 03:02 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

வெங்கடாஜலபதி கோயில் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடக்கும்.

இந்தாண்டு ஜூலை 2 கொடியேற்றம் செய்யப்பட்டு நாள்தோறும் சுவாமி பல்லக்கு சப்பரம் சிறிய கருட வாகனம், பெரிய கருட வாகனம் சேஷ வாகனங்களில் நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்நேற்று காலை 10:30 மணிக்கு துவங்கியது. முன்னதாக பூதேவி ஸ்ரீதேவி சமேதரராய் பெருமாள் காலை 9:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார். சடையம்பட்டி கிராம மக்கள் தேருக்கு தடி போட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக சுவாமி வலம் வந்து மதியம் 2:35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

சுவாமி வலம் வரும் போது பக்தர்கள் நல்ல விளைச்சல் வேண்டி பருத்தி வத்தலை சூறையிட்டும், துாப தீபம் சர்க்கரை தீபம் கற்கண்டு தீபம், துளசி மாலை, பன்னீர் தெளித்தும் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us