/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆனைக்கூட்டத்தில் ரோட்டோர திறந்த வெளி கிணறால் அச்சம்
/
ஆனைக்கூட்டத்தில் ரோட்டோர திறந்த வெளி கிணறால் அச்சம்
ஆனைக்கூட்டத்தில் ரோட்டோர திறந்த வெளி கிணறால் அச்சம்
ஆனைக்கூட்டத்தில் ரோட்டோர திறந்த வெளி கிணறால் அச்சம்
ADDED : ஆக 03, 2025 05:03 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆனைக்கூட்டம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் உள்ள திறந்த வெளி கிணறால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தத்திலிருந்து வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆனைக்கூட்டம் வழியாக வெற்றிலையூரணி, தாயில்பட்டி, சாத்துார் பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் பட்டாசு ஆலைகள் உள்ளதால் இந்த ரோட்டில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனைக்கூட்டம் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் இருபுறமும் திறந்த வெளி கிணறு உள்ளது.
ஒரு பகுதியில் உள்ள கிணறுக்கு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்புறம் உள்ள கிணறு திறந்த நிலையிலேயே உள்ளது. இந்த ரோட்டில் சென்று வரும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் கிணற்றில் கவிழ வாய்ப்புள்ளது. இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால் டூ வீலர் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் அச்சத்திலேயே வர வேண்டி உள்ளது. எனவே பகுதியில் உள்ள கிணற்றின் அருகே ரோட்டோரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.