/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
யானைகளால் தென்னை, மா மரங்கள் சேதம்
/
யானைகளால் தென்னை, மா மரங்கள் சேதம்
ADDED : மே 31, 2025 12:32 AM

சேத்துார்: சேத்துாரில் விவசாய தோப்பில் புகுந்த ஒற்றை காட்டு யானை தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து முகாமிட்டுள்ள யானை வனப்பகுதிக்குள் விரட்டி நிரந்தர தீர்வு ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் தென்னை, மா, வாழை, கரும்பு, பலா சாகுபடி விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடந்து வருகிறது.
இப்பகுதி பிராவடி பீட் செல்லப்பிள்ளை ஊரணி அருகே ராஜபாளையம் அமர்நாத், சேத்துார் சுந்தர் ஆகியோரின் தோப்பில் நேற்று முன்தினம் புகுந்த ஒற்றை யானை 40க்கும் அதிகமான தென்னை மர குருத்துகளை பிய்த்தும், 5 மாமர கிளைகளை ஒடித்தும் சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன், அறுவடைக்கு தயாராக இருந்த மாம்பழங்களை சேதப்படுத்தி உள்ளது. அத்துடன் வேலிகளை உடைத்து உள்ளதால் மீண்டும் உள் நுழைந்து பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இரவு காவல் இருந்து வருகின்றனர்.