/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தென்னை மா மரங்களை சாய்த்த யானைகள்: வேதனையில் விவசாயிகள்
/
தென்னை மா மரங்களை சாய்த்த யானைகள்: வேதனையில் விவசாயிகள்
தென்னை மா மரங்களை சாய்த்த யானைகள்: வேதனையில் விவசாயிகள்
தென்னை மா மரங்களை சாய்த்த யானைகள்: வேதனையில் விவசாயிகள்
ADDED : டிச 07, 2024 05:34 AM

ராஜபாளையம்,: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் அருகே விவசாய தோப்பில் தென்னை மா மரங்களை சேதப்படுத்தி வரும் யானையால் விவசாயிகள் சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் 6வது மைல் நீர்த்தேக்கம் பின்புறம் நுாற்றுக்கணக்கான ஏக்கர் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. நீர் தேக்கம் பின்புறம் கணேசர் என்பவருக்கு சொந்தமான தோப்பில் இரவு நேரம் வேலியை உடைத்து கொண்டு வந்த யானை கூட்டம் தென்னை , மா மரங்களை சாய்ந்து சேதப்படுத்தி உள்ளது.
காவலர்கள் யானைகளை விரட்ட முயற்சித்தும் முடியாததால் இரவு முழுவதும் முகாமிட்டு 20க்கும் அதிகமான தென்னை மா மரங்களை சேதம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.