/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிபுரிவதோ 50 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்; வருகை பதிவாவதோ 90
/
பணிபுரிவதோ 50 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்; வருகை பதிவாவதோ 90
பணிபுரிவதோ 50 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்; வருகை பதிவாவதோ 90
பணிபுரிவதோ 50 டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்; வருகை பதிவாவதோ 90
ADDED : பிப் 15, 2024 04:46 AM
சிவகாசி: சிவகாசியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் 50 பேர் வரை பணிபுரிகின்றனர். ஆனால் 90 பேருக்கு வருகை பதிவாகின்றது, என சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடந்தது. துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ஸ்ரீனிகா தி.மு.க.: திருத்தங்கலில் பழைய பேவர் பிளாக் கற்களை வைத்து ரோடு போடப்பட்டுள்ளது. தரமான ரோடு அமைக்க வேண்டும்.
மகேஸ்வரி தி.மு.க.,: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் வேலை பார்ப்பதற்காக நன்றாக இருந்த ரோடை அனுமதி இல்லாமல் தோண்டி விடுகின்றனர். இதனால் புதிதாக ரோடு போடப்பட்டும் நிதி வீணாகிறது.
சேதுராமன் தி.மு.க.,: திருத்தங்கலில் தேவர் சிலையில் இருந்து பழைய வெள்ளையாபுரம் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
செல்வம், தி.மு.க.,: 1 வது வார்டில் இரு மாதமாக மோட்டார் பழுது அடைந்துள்ளதால் தண்ணீர் வினியோகம் செய்ய முடியவில்லை. உடனடியாக சரி செய்ய வேண்டும்.
கரை முருகன், அ.தி.மு.க.,: முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது அகற்றினாலும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளோடு ஆய்வு கூட்டம் நடத்தி சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.
சாமுவேல், சுயே: மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் 50 பேர் வரை பணிபுரிகின்றனர். ஆனால் 90 பேருக்கு வருகை பதிவாகின்றது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் பதிலளித்து பேசுகையில், அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வருங்காலங்களில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படும் என்றார்.

