/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை விதிதளர்வு எதிர்பார்ப்பில் ஊழியர்கள்
/
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை விதிதளர்வு எதிர்பார்ப்பில் ஊழியர்கள்
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை விதிதளர்வு எதிர்பார்ப்பில் ஊழியர்கள்
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை விதிதளர்வு எதிர்பார்ப்பில் ஊழியர்கள்
ADDED : நவ 14, 2025 01:45 AM
விருதுநகர்: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சாதனை ஊக்கத்தொகைக்கான விதியை தளர்த்தி உயர்த்தி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 2024ல் 91 நாட்கள், அதற்கு மேல் மற்றும் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ. 85, 151 நாட்கள், அதற்கு மேல், 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்தால் ரூ. 195, 200 நாட்கள், அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ. 625 என நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு கணக்கீட்டு 'சாதனை ஊக்கத் தொகை' வழங்கப்பட்டது.
இந்த சாதனை ஊக்கத்தொகைக்கான விதிகள் 1998ல் இருந்து சிறிதும் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த விதிகளில் மாற்றம் செய்யவும், ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கவும் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் விதியில் எந்த மாற்றமும் செய்யாமல் ஒரே விதி 16 ஆண்டுகளாக பின்பற்றப்படுவதால் பணியாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து துறையில் பணியாளர்கள், உதிரிபாகங்கள் பற்றாக்குறை, பணப்பலன்கள் காலதாமதம், 10 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தொடருகின்றன. இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் 'சாதனை ஊக்கத் தொகை' விதியை மாற்றம் செய்து, வரும் காலங்களில் ஆண்டு தோறும் உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

